டென்னிஸ் வீராங்கனை சானியாவை பிரிந்த சோயிப் மாலிக்... வைரலாகும் 3வது திருமண புகைப்படம்!

ShoaibMalik
ShoaibMalik

ந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவு கணவர் சோயிப் மாலிக்கைபிரிந்து வாழ்வதாக பரவி வந்த தகவல் தற்போது உண்மையாகியுள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியாவின் கணவராக இருந்த சோயிப் மாலிக் தற்போது 3வது திருமணம் செய்துகொண்ட படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கடந்த 2010ம் ஆண்டு 2வது திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்னர் 2002ம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்பவர் சோயிப் மாலிக் முதல் திருமணம் செய்திருந்தார். சோயிப் மாலிக், சானியா மிர்சாவின் திருமணம் அப்போது இந்தியா, பாகிஸ்தானில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டதற்காக சானியா மிர்சா இந்தியாவில் பிற்போக்கு சிந்தனையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் தாய் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். ஆனால், தன் மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்துக்கொண்டு வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திவந்தார் சானியா.

சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவருக்கும் இஷான் என்ற ஒரு மகன் உள்ளார். இருவரின் திருமண வாழ்க்கை அமைதியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சானியா மிர்சா விவாகரத்து பெற்றுவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனால், இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், மகனுடன் சானியா மிர்சா மட்டும் இருக்கும் படங்கள் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துவந்தார். அதில் தன்னுடைய உலகம் தன் மகன் இஷான் மட்டும்தான் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத் என்பவரை திருமணம் செய்துகொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். சோயிப் மாலிக் வெளியிட்டுள்ள இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சனா ஜாவத்-க்கும் இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது.

மேலும், சோயிப் மாலிக் திருமணம் குறித்து சானியார் மிர்சா எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com