பிலிப்பைன்ஸில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸில்  அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக நிலநடுக்கம் குறித்த செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கி வருகிறது. பூகம்பம் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளில் இருந்தே இன்னும் மக்கள் மீளவில்லை. ஏறக்குறைய 40000 பேரை காவு வாங்கியது துருக்கி நிலநடுக்கம் .இந்த நிலையில் நேற்று நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதுமில்லை. தற்போது இன்று ஏற்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் பயங்கர நிலநடுக்கம் பொது மக்களிடையே பயங்கர பீதியினை ஏற்படுத்தி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீ. ஆழத்தில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் திடீரென வீடுகள் குலுங்கியதால் அச்சத்தில் உறைந்தனர். இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் பலியாகினர். துருக்கியில் இந்த மாதத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com