துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ! மருந்துகள் மற்றும் மருத்துவர் குழுவை அனுப்பியது இந்தியா!

துருக்கியில் அடுத்தடுத்து  பயங்கர நிலநடுக்கம் ! மருந்துகள் மற்றும் மருத்துவர் குழுவை  அனுப்பியது இந்தியா!
Published on

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மத்திய துருக்கியில் 5 முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 8000 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தியா தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.இந்தியா 6 டன் மருந்து பொருட்களையும் அனுப்பியுள்ளது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதி தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியா, துருக்கி, லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய துருக்கியில் 2-வது நாளாக நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிதீவிரமான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி அதிபர் எர்துவான் கூறியுள்ளார். 1939-ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com