கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது.
மேற்குத் தொடற்சிமலைப் பகுதியான சிறுமுகை வனச்சரக வனப்பகுதியில் குஞ்சப்பனை அருகே பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு செடிகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகியது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் . இம்மலைத் தொடரானது மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்குகின்றது. பின்பு அங்கிருந்து மராட்டிய மாநிலம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த மலைத்தொடர் கன்னியாகுமரியில் வந்து முடிகின்றது.இதன் நீளம் சுமார் 1600 கி.மீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீ. இம்மலைத் தொடர்களின் மொத்த பரப்பளவு சுமார் 1,60,000 சதுர கி.மீ. ஆகும்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நீல மலைப்பகுதியில் தற்போது வறட்சி நிலவ துவங்கியுள்ளது . மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பயங்கர காட்டு தீ ஏற்பட்டு ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகின.
குறிப்பாக சிறுமுகை வனச்சரக வனப்பகுதி அமைந்துள்ள பெத்தி குட்டை,உளியூர், கோத்தகிரி சாலை வனப்பகுதியில் மரங்கள்,செடி, கொடிகள் காய்ந்து வரும் நிலையில் மாலை குஞ்சப்பனை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ ஏற்பட்டது.
காட்டு தீ மளமளவென வேகமாக போல பரவி பல கிலோமீட்டர் தொலைவிற்குக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதில் வனத்திலிருந்த பல அரியவகை மரங்கள், செடிகள், கொடிகள் என எரிந்து நாசமாகின. தீ பரவிய இடம் அடர் வனப்பகுதி என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.