ரஷ்யா: வழிபாட்டுத் தளங்களை தாக்கிய பயங்கரவாதிகள்… 14 போலீஸார் பலி!

Terrorist Attack in Russia
Terrorist Attack in Russia
Published on

நேற்று ரஷ்யாவில் யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும், போலீஸ் நிலயத்தின் மீதும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸார் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்கள் நிகழும். ரஷ்யா உக்ரைனுடன் போர் நடத்தி வரும் சமயத்தில், உள்நாட்டிலேயே அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வருகின்றனர் பயங்கரவாதிகள். ரஷ்ய அதிபர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் இந்தச் சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எப்போதாவது நடக்கும் சில பயங்கரவாதிகளின் தாக்குதலால்தான் உயிர்சேதம் நிகழும்.

அந்தவகையில், வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சர்ஸ்களுக்குள்ளும், Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் துப்பாக்கியால் நுழைந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த மக்களையும் தாக்கினர். இந்த தாக்குதலால், மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்சகள் தீப்பற்றி எரிந்தன. வழிபட வந்த மக்கள் அனைவரும் உயிர்பிழைத்த நிலையில், மதகுரு ஒருவர் மட்டும் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அங்கிருந்து தப்பிச் சென்ற மர்ம நபர்கள், போலீஸ் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்திக்கொண்டே சென்றனர். இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Terrorist Attack in Russia

இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்தது இல்லை என்றும், பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் போலீஸார் 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள், மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது நிகழ்ந்த இந்தச் சம்பவம், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com