சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தல தோனி:

சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தல தோனி:

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்கவிருக்கிறது. இதற்காக இன்று ராஞ்சியில் பயிற்சி மேற்கொள்ள இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கையில் இளநீர் வைத்துக் கொண்டே தோனி அங்கு வந்தார்.

அவரைக் கண்ட இந்திய வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தோனி சந்தித்து பேசியுள்ளார். இதற்கிடையில் இஷான் கிஷான் தனது ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்து வாங்கினார். வாஷிங்டன் சுந்தருக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.

தோனியை சந்தித்தது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறும்போது: மஹிபாயை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தோனியை சந்திக்கும் போது விளையாட்டை விட வாழ்க்கையைப் பற்றித்தான் பேச முயற்சிப்போம். நாங்கள் ஒன்றாக விளையாடியபோது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகளை நான் பிழிந்து எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி ஏற்கனவே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்று இழந்துள்ள நிலையில், தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடரில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். ராஞ்சி டிராபியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா இந்த டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 22 டி20 போட்டிகளில் இந்தியா 12 போட்டிகளிலும், நியூசிலாந்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com