கஞ்சா கடத்தல் குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவை அடுத்த வாரம் தூக்கிலிட முடிவு: சிங்கப்பூர் அரசு!

கஞ்சா கடத்தல் குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவை அடுத்த வாரம் தூக்கிலிட முடிவு: சிங்கப்பூர் அரசு!
Published on

ஒரு கிலோ கஞ்சா கடத்திய குற்றத்திற்காக அடுத்த வாரம் தூக்கிலிடப்படவுள்ள சிங்கப்பூர் இளைஞரின் குடும்பம் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு அந்த வழக்கில் மறுவிசாரணைக்கு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் சிங்கப்பூரின் முதல் மரணதண்டனை இதுவாகும்.

46 வயதான தங்கராஜூ சுப்பையா, போதைப்பொருள் கடத்தலுக்கு சதி செய்ததற்காக 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தார் அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால், மேல் முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை அன்று, நிறைவேற்றப்படவிருந்த அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது.

"எனது சகோதரரது வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் ... ஜனாதிபதி எங்கள் அனைத்து மனுக்களையும் வாசிப்பார் என்று நான் நம்புகிறேன்," என்று அவரது சகோதரி லீலாவதி சுப்பையா ஒரு செய்தி மாநாட்டில் தமிழ் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும் தனது சகோதரரைப் பற்றிப் பேசும்போது மிகவும் உணர்வு வயப்பட்டவராக,

"சிறு வயதிலிருந்தே, அவர் மிகவும் அன்பானவர், அனைவராலும் விரும்பப்படுபவர், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை ... அவர் தனது குடும்பத்திற்கு உதவ தன் வாழ்வில் எல்லாவிதங்களிலும் பலவற்றைத் தியாகம் செய்துள்ளார்," என்று நெகிழ்ந்து போய் கண்ணீர் விட்டார்.

சிங்கப்பூரின் கடுமையான போதைபொருள் சட்டங்களின் கீழ் மரண தண்டனைக்குத் தகுதியான குறைந்தபட்சத் தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான அளவில் அதாவது சுமார் 1,017 கிராம்(35.9 அவுன்ஸ் அளவு) கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக 2017 ஆம் ஆண்டு தங்கராஜூக்கு போக்குவரத்துக்கான சதித்திட்டத்தில் ஈடுபடுதல் எனும் பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தங்கராஜூ குடும்பத்தினர் கூறுகையில், இந்த வழக்கில் ஓட்டைகள் இருப்பதாகவும், தங்கராஜூ போதை மருந்துகளை ஒருபோதும் கையாளவில்லை என்றும் கூறுகின்றனர். அவர் சட்ட ஆலோசகர் இன்றி போலீஸாரால் விசாரிக்கப்பட்டதாகவும், அவரது முதல் போலீஸ் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது அவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர் மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

26 வயதான தங்கராஜூவின் மருமகள் சுபாஷினி இளங்கோ பேசுகையில், தனது மாமா தைரியமானவர் என்றும், புதன் கிழமைக்கு அவர் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது மரணம் நியாயமற்றது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், " கடவுள் அவருக்கு உதவுவார் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்தார்.."

செய்தி மாநாட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முறையீடுகளில் கையெழுத்திட்டனர். இந்த மேல் முறையீட்டை மன்னுக்களை சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்குவதாக தெரிவித்தனர்.

தங்கராஜூ சுப்பையா பற்றிய சோசியல் ஆக்டிவிஸ்ட் லீலாவின் பதிவு:

உலகின் பல பகுதிகளில் -- அண்டை நாடான தாய்லாந்து உட்பட - கஞ்சா வழக்குக்கு அதிக பட்சமான மரண தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்ய மனித உரிமைக் குழுக்கள் சிங்கப்பூர் மீதும் தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆசிய நிதி மையமானது உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் மரண தண்டனையானது கடத்தலுக்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பாக இருக்கும் என்றும் அது தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் பணியகம், தங்கராஜூக்கு " இந்த வழக்குக்கான செயல்முறை முழுவதும் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சட்ட ஆலோசகரின் அணுகல் இருந்தது" என்று கூறியது, மற்ற எந்த அறிக்கைகளுக்கும் மொழிபெயர்ப்பாளரைக் கோரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட நீதிபதி இது "கபடமானது" என்று கூறினார்.

சிங்கப்பூர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மார்ச் 2022 இல் தூக்கிலிடக்கூடிய வகையிலான மரணதண்டனையை மீண்டும் தொடங்கியது.

கடந்த ஆண்டு மட்டும் பதினொரு தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன, அனைத்தும் போதைப்பொருள் குற்றங்களுக்காக.

தூக்கிலிடப்பட்டவர்களில் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு தண்டனை நிறைவேற்றப்படும் போதும், பிரிட்டிஷ் டைகூன் ரிச்சர்ட் பிரான்சனுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் போதும் அது உலகளாவிய கவனத்தைப் பெற்றது. ஐ நா சபை உட்பட மனித உரிமை அமைப்புகள் வரையிலும் மரண தண்டனைக்கு எதிராகத் தங்களது கருத்துக்களை வலியுறுத்தின. ஏனெனில் ரிச்சர்ட் பிரான்சனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அவருக்கு மனநல குறைபாடு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆயினும் சிங்கப்பூர் அரசு தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித சுணக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதூ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com