வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இவ்விழாவில் இதில் நடித்த யோகிபாபு, அதிதி பாலன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
கதாநாயகி அதிதி பாலன்:
பல இயக்குநர்கள் ஜாம்பான்களுடன் நடித்திருக்கிறேன். அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன் தான். இப்படம் எனக்கு கற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. பாரதிராஜா சாரின் ஒவ்வொரு வசனம், அவர் எப்படி உச்சரிக்கிறார் என்று ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே இருப்பேன்.எல்லைக் கடந்த வியப்பு என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடன் பணியாற்றிதை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன், மிகவும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் துரை வீரசக்தி :
தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள். நன்றாக யோசித்துக் கொள் என்றார். இந்த படம் அவருக்கு மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும். நான் மறுபடியும் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அவருடைய பயணம் மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன். இந்த படத்தை தயாரித்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கும் என்றார் தயாரிப்பாளர் துரை வீரசக்தி.
5 ஸ்டார் கதிரேசன் :
தங்கர் பச்சானைப் பற்றி கூறுவதற்கு ஒரு நாள் போதாது. அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மக்களோடு சேர்ந்து எடுத்திருக்கிறார். மெலோடி பாடல்கள் என்றால் ஜி.வி.பிரகாஷ் தவிர யாராலும் கொடுக்க முடியாது. யோகிபாபு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். புது இயக்குநர்களுக்கு யோகிபாபுவும், டெல்லி கணேஷ் சாரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்றார்.
நடிகர் யோகிபாபு :
இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த வீரசக்தி மற்றும் தங்கர் பச்சான் சாருக்கு நன்றி.எனக்கு ரஜினி நடித்த நடித்த 'பரட்டை' கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விருப்பம் என்றார்.
தங்கர் பச்சான் 'நடிப்பு செம்மல்' என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு நன்றி என்றார் நடிகர் யோகிபாபு.
இயக்குனர் தங்கர் பச்சான் :
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர் யோகிபாபு, அவரை சரியாக கையாண்டால் மிகச் சிறந்த நடிப்பைப் பெறலாம். இதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இந்த படத்தில் எல்லோரையும் அழ வைப்பார். இவர் நடிக்க ஒப்புக் கொண்ட பின்பு தான் இந்த படம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. மிக மிக அழுத்தமாக பாத்திரம், இதற்கு மேல் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். இசையோடு சேர்ந்து இவருடைய காட்சிகளைப் பார்க்கும் போது சிறப்பாக இருந்தது. இப்படத்தில் மூன்று விதமான இசை இருக்கிறது என்றார்.