பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த தினம் (செப் 17)

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த தினம் (செப் 17)

பகுத்தறிவு தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதி பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதிகளை காத்திடத் தொடர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார்.

18 வயதில் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துவர் தனது இறுதிமூச்சு வரை சுயமரியாதை சுடராகவும், பகுத்தறிவு பகலவனாகவும் வாழ்ந்து மறைந்தவர் தந்தை பெரியார்.

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற சீரிய கொள்கை உடையவர். ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என முழக்கமிட்டவர். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம்  ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். பல்வேறு சமூக நீதி குறித்த பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.

பெரியாரின் 144 பிறந்த தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com