சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் போட்டி!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் போட்டி!
Published on

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி அமைச்சரான 66 வயது தர்மன் சண்முகரத்தினர் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சிங்கப்பூரின் மூத்த பொருளாதாரக் கொள்கை வகுப்பாளரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் தனது அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்வதாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வியாழன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிகாலம் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தே தியுடன் முடிவடைகிறது. தனது பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் அவர் கடந்த மே 29 ஆம் தேதியே , அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான சண்முகரத்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்த விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதமொன்றை சமர்பித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில்,

தர்மன் சண்முகரத்தினத்தின் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் மிகப்பெரிய இழப்பு என வலியுறுத்தியுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் இதுவரையில் சிங்கப்பூரில், துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் பிரதமருக்கு பொருளியல் கொள்கைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரின் இந்திய வம்சாவளி மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, இந்த ஆண்டின் இறுதியில் நகர-மாநில அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

தர்மன் சண்முகரத்தினம் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜூரோங் குழு பிரதிநிதித்துவ தொகுதிகளில் (ஜூரோங் ஜிஆர்சி) பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலுக்காக, அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC துணைத் தலைவர் பதவியில் இருந்தும், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் பதவி விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தம்மைப் பார்க்க விரும்பும் சிங்கப்பூரர்களிடமிருந்து சமீப மாதங்களில் தனக்குக் கிடைத்த கோரிக்கைகளால் தான் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததாக தர்மன் கூறினார்.

"இது கடினமான முடிவு," என்று அவர் தனது கடிதத்தில் கூறினார். "எனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்துள்ளேன், மேலும் வரும் ஆண்டுகளில் நாட்டிற்கு எவ்வாறு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதை கவனமாக சிந்தித்தேன்." என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தர்மன். பிரதமர் லீ, தர்மனுக்கு எழுதிய கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தர்மன் எடுத்த முடிவை தான் புரிந்து கொண்டதாக கூறினார்.

பொருளாதாரப் பட்டதாரியான திரு தர்மன் தனது முந்தைய தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) 2011 முதல் தலைவராகப் பங்காற்றினார்.

உலகளாவிய அரங்கில், உலகளாவிய நிதி நிர்வாகத்திற்கான G20 குழுவின் தலைவராக தர்மன் உள்ளார். அது தவிர சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் முதல் ஆசியத் தலைவராகவும் இருந்தார்.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு முந்தைய அதிபர் இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்த நிலையில் சிங்கப்பூர் இப்போது தான் தனது முதல் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது,

68 வயது நிறைந்தவரான ஜனாதிபதி ஹலிமா, நாட்டின் எட்டாவது ஜனாதிபதி மற்றும் முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இவரது ஆறு ஆண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.

2017 ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஒதுக்கப்பட்ட தேர்தலாகும், இதில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அப்போது வேறு வேட்பாளர்கள் யாரும் இல்லாததால் திரு ஹலிமா அதிபராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com