மலேசியாவில் நடைபெறும் 11 ஆம் உலகத் தமிழ் மாநாடு பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு!

மலேசியாவில்  நடைபெறும் 11 ஆம் உலகத் தமிழ் மாநாடு பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு!

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் 11 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் 200-க்கும் மேற்பட்ட தமிழ்அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இணைய காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இம்மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் .

தனிநாயகம் அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டெல்லியில் 1964 இல் உருவானது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆராய்ச்சிகளை உலகறியச் செய்யும் வகையில், உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 12 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழி யியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்று அவர்கள் கூறினர். இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்றுள்ள அவர், உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com