விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் 3 நொடி விதி.

விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் 3 நொடி விதி.

ந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் தரமாக மாறி வருவதால், வாகனங்கள் எல்லாமே தற்போது கணிசமான வேகத்தில் செல்கிறது. எக்ஸ்பிரஸ் சாலைகள் எனப்படும் அதிவிரைவு சாலையில், அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை களில் விபத்து விகிதம் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் விபத்தின் எண்ணிக்கைகளும் அதில் மரணமடைபவர் களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் வேகமாக செல்லும்போது விபத்து நேர்ந்தால், அதன் சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும். 

இதை கருத்தில் கொண்டுதான், விபத்தைத் தடுக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல பாதுகாப்பு அம்சங்களையும் வாகனங்களில் மேம்படுத்தி வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே வாகன ஓட்டிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விபத்துக்கள் தடுக்கப்படுகிறது என்றாலும், வெவ்வேறு வழிகளில் விபத்தானது ஏற்பட்டு அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது விபத்துக்களை தவிர்க்க அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி ஒன்று உள்ளது. இது சட்டப்பூர்வமாக்கப் படவில்லை என்றாலும், இதைப் பின்பற்றுவதால் விபத்துக்களை தவிர்க்கலாம் என உலக அளவில் நம்பப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் இந்த விதி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருக்கிறதா என்று கேட்டால், கேள்விக்குறி தான். 

3 நொடி விதி: இந்த விதியானது என்ன சொல்கிற தென்றால், நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது உங்களுக்கும் உங்களுக்கு முன்னே செல்லும் வாகனத்திற்கும் இடையே குறைந்தது 3 செகண்ட் இடைவேளியாவது இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு முன்னே செல்லும் வாகனம் திடீரென்று பிரேக் பிடித்தால் கூட, நீங்கள் அந்த வாகனத்தில் மோதுவதற்கு மூன்று நொடி நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் உங்களுடைய வாகனத்தை முன்னால் இருக்கும் வாகனத்திலிருந்து இடைவெளி விட்டு ஓட்டி வர வேண்டும். 

இந்த இடைவெளியானது வாகனம் செல்லும் வேகத்தைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு வாகன 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறதென்றால், நொடிக்கு 20 மீட்டர் நகரும். எனவே 3 நொடி இடைவெளி கிடைக்க குறைந்தது 60 மீட்டர் தூரமாவது முன்னே செல்லும் வாகனத்திலிருந்து பின்னே இருக்க வேண்டும். இதுவே 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த வாகனத்தில் பயணிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இடைவெளியை அதற்கு ஏற்றார் போல மாற்றி பயணிக்க வேண்டும். 

கார் ஓட்டுபவர்கள், பொதுவாகவே இந்திய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்குள்ளாகவே பயணிப்பது நல்லது. இந்த 3 நொடி விதியைப் பற்றி இந்தியாவில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதை ஒவ்வொரு வாகன ஓட்டியும் பின்பற்றினால் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் பெருமளவு குறையும். 

இந்த விதியானது நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும்போது மட்டுமே பயன்படும். நகர்புறங்களில், நெரிசல் அதிகமுள்ள இடங்களில் முடிந்தவரை வாகனத்தை மெதுவாக ஓட்டினாலே வாகன விபத்துக்களை தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com