மறைந்த முதலமைச்சர் ஜே.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம்!

அதிமுக தலைவர்கள் அஞ்சலி!
மறைந்த முதலமைச்சர்  ஜே.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முதலமைச்சர் புரட்சி தலைவி ஜே.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம். அதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ணபூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். அதிமுக தொண்டர்கள் பலர் அவருக்கு மரியாதையை செலுத்தினர். அதே போன்று அதிமுகவின் பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

J.Jayalalitha
J.Jayalalitha

சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரோடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, மைத்ரேயன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com