சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய AI… மார்க் கொஞ்சம் கம்மிதான்பா…!

AI
AI

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பங்குபெற்ற ஒரு AI அட்டகாசமாக சில நிமிடங்களிலேயே அனைத்து கேள்விகளுக்கும் விடைக் கண்டறிந்துள்ளது.

AI தொழில்நுட்பம் நமது பல வேலைகளின் சுமையை குறைக்கிறது என்றாலும், சில சமயங்களில் அதீத வசதி சோம்பேறித்தனத்திற்கு வழி வகுக்கும் என்பதால், சிலர் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல் சிலர் மனிதர்கள் செய்யும் வேலைபோல் வருமா என்று AI ஐ புறக்கணிக்கிறார்கள். யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் AI பார்ப்பதில்லை. அவ்வப்போது எதோ ஒரு சாதனையை செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்குகிறது.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மொத்தம் இரண்டு தாள்களாக காலை மற்றும் மதியம் என தேர்வு நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் தேர்வு முடிந்த பிறகு அதன் வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதனை ‘Padh AI’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயலி ஏழு நிமிடங்களில் அனைத்து கேள்விக்கான விடைகளை கண்டு தெரிவித்துள்ளது.

அதோடு 200-க்கு 170 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தெரியவந்தது. டெல்லியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த செயலியின் செயல்பாடு குறித்த லைவ் டெமோ ஜூன் 16ல் நடத்தப்பட்டது. அதில் கல்வி துறை, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:
பெரிய பலசாலியும் தன் குழுவுடன் இணைகிறபோதுதான் உயர்வான வெற்றி பெருகிறான்!
AI

இந்த செயலியில் முதலில் தேர்வின் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு அதற்கான விடையை கண்டு ஏஐ செயலி சொல்லியது. இந்த விடைகளை யுபிஎஸ்சி பயிற்சி அளித்து வரும் நிறுவனங்கள், வணிக ரீதியாக பரவலான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களின் ஏஐ மாடல் அளித்த விடைகளுடன் ஒப்பிட்டும் பார்த்துதான் மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்த செயலி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com