அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை! மீனவர்கள் வருத்தம்!

அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை! மீனவர்கள் வருத்தம்!

தமிழகத்தில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியதில் "அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை" என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் தொடங்கியது. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்குகிறது. ஆனால் இந்த தொகை தற்போதைய விலைவாசி ஏற்றத்திற்கு போதுமானதாக இல்லை. இந்த நிவாரணத்தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 32 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நாகூர், நாகை, செருதூர், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட துறைமுகப் பகுதிகளில் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்படும். மீன்பிடி தொழில் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதே நிவாரணத் தொகை தடை காலத்தில் வேலையின்றி தவிக்கும் மீன்பிடி தொழில் சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.மீன்பிடித் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என்றுமீனவர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலத்தின் போது விசைப்படகுகளை பழுது நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவார்கள். தடைக்காலத்தின் போது வருவாய் இல்லாததால் சீரமைப்பு பணிகளை மீனவர்கள் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விசைப்படகுகளுக்கு தகுந்தார் போல் பழுது நீக்குவதற்கு மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என்கிறார்கள் மீனவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com