காந்தாரா 'வராஹ ரூபம் ' பாடல் மீதான தடை நீக்கம்! கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

kantara
kantara

காந்தாரா படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடலான வராஹ ரூபம் பாடல் மீதான தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும், வராஹ ரூபம் பாடல் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. கேரளாவை சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவால் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு யூட்டியூபில் வெளியிட்டிருந்த நவரசம் பாடலும் வராஹ ரூபம் பாடலும் ஒன்றாக இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதை அடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடினர்.

இதையடுத்து, அவ்வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வராஹ ரூபம் பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது தாய்க்குடம் பிரிட்ஜ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற எல்லை வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேநேரம் எர்ணாகுளத்தில் உள்ள கமர்சியல் நீதிமன்றத்தில் அடுத்த 14 நாட்களுக்குள் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினர் முறையீடு செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டுதலையும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kanthara
kanthara

கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா எனபலர் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியான படம் வசூலை வாரிக் குவித்தது.

வராஹா ரூபம் பாடலை ஒளிபரப்ப தடை விதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து அமேசான் பிரைமில் வெளியான கந்தாரா திரைப்படத்தில் வராஹ ரூபம் பாடலின் ஒரிஜினல் டிராக் மாற்றி அமைக்கப்பட்டு வெளியிட்டு இருந்தது இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, தீர்ப்பினை தோடர்ந்து பழைய வராஹா ரூபம் பாடலை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com