பெஸ்ட் ஹெட்செட், இந்தியாவில் தயார் செய்யப்படுபவைதான்! சீன தயாரிப்புகளை ஒதுக்கி தள்ளும் வாடிக்கையாளர்கள்!

பெஸ்ட் ஹெட்செட், இந்தியாவில் தயார் செய்யப்படுபவைதான்! சீன தயாரிப்புகளை ஒதுக்கி தள்ளும் வாடிக்கையாளர்கள்!

செல்போனுக்கு அடுத்துபடியாக அத்தியாவசியப் பொருளாக மாறியிருப்பது ஹெட்செட். வீடு, அலுவலகம், பொதுவெளி என எந்தவொரு இடத்திலும் ஹெட்செட் அவசியமாகியிருக்கிறது. நல்ல ஹெட்செட்டுக்கான தேடல் எப்போதும் தொடர்ந்து இருந்து வருகிறது.

ஹெட்செட்டை பொறுத்தவரை 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கிறது. முன்னர் சீனாவிலிருந்து இறக்குமதியான ஹெட்செட் அதிகளவில் இருந்தன. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது.

நல்ல தரமான ஆடியோ, ஸ்டீரியோ, பட்ஸ் உள்ளிட்டவை தரமாக இருக்கவேண்டும் என்று இந்திய வாடிக்கையாளர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். கொரானா தொற்று பரவலுக்கு பின்னர் ஹெட்செட் உபயோகம் தொடர்நது அதிகரித்து வந்த நிலையில் சீனா இறக்குமதிகளால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இயலவில்லை.

இந்திய சந்தையை பொறுத்தவரை போட், நாய்ஸ், போல்ட் ஆடியோ, எம்வி போன்ற ஹெட்செட் பிராண்ட், ஏறக்குறைய 85 சதவீத சந்தையை ஆக்ரமித்திருக்கின்றன. கடந்த ஆண்டில் ஏராளமான ஆபர், இந்திய சந்தைகளுக்கு ஏற்ற விலை உள்ளிட்டவற்றால் வாடிக்கையாளர்களின் செல்வாக்கை தொடர்நது தக்க வைத்திருக்கின்றன.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஹெட்செட் பிராண்ட், போட்தான். ஹெட்செட் வாங்க நினைப்பவர்களில் 89 சதவீதம் பேர் போட் ஹெட்செட்டுக்கே முன்னுரிமை தருகிறார்கள். நவீன தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் விற்பனையில் ஒரு இந்திய நிறுவனம், முன்னுக்கு வந்திருப்பதுடன் தொடர்ந்து மூன்றாண்டுகளாக முதலிடத்தில் இருப்பதும் ஆச்சர்யமான விஷயம்.

80 சதவீதத்திற்கும் அதிகமாக புழக்கத்தில் இருந்த சீனத்தயாரிப்புகள் 13 சதவீதமாக குறைந்துவிட்டன. இத்தனைக்கும் ரியல்மீ போன்ற சீன பிராண்டுகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற சர்வதேச அளவில் பிரபலமான பிராண்ட் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. 8 சதவீதம் பேர் இன்னும் சர்வதேச பிராண்ட் மீது விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் ஹெட்செட் விலை குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைந்திருக்கிறது. குறைவான விலைக்கு நிறைவான தரத்தில் தருவதிலும் போட் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. அடுத்ததாக நாய்ஸ், கடந்த ஆண்டில் முன்னுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் போல்ட் ஆடியோவும், அதைத்தொடர்ந்து எம்வி உள்ளிட்டவையும் டாப் 5 இடங்களில் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஹெட்செட் தேவைகளின் எண்ணிக்கை 44 சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பம், நீடித்து உழைக்கும் தன்மை இல்லாதது போன்ற காரணங்கள் தவிர, வாடிக்கையாளர்களின் ரசனையும் ஆண்டுதோறும் மாறிக்கொண்டு வருகிறது. ஹெட்செட்டில் ஆடியோவில்

துல்லியத்தை தவிர, காதில் பொருத்துவதால் வரும் கம்போர்ட் லெவல், அதன் கவர்ச்சிகரமான நிறம் போன்றவையும் விற்பனையை நிர்ணயம் செய்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com