நிலவுக்கு செல்ல ஆசைப்படும் பில்லியனர் கம் கஃபேரியன்!

நிலவுக்கு செல்ல ஆசைப்படும் பில்லியனர் கம் கஃபேரியன்!
Published on

கம் கஃபேரியன் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி துறை சார்ந்த கோடீஸ்வரர் ஆவார். விண்வெளி கோடீஸ்வரரான கம் கஃபேரியன் நிலவுக்கு செல்ல வேண்டும் என்பதை தனது நீண்ட நாள் ஆசையாக கொண்டிருக்கிறார்.

ஈரானில் பிறந்த கம் கஃபேரியன் ஏற்கனவே 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எக்ஸ் எனர்ஜி நிறுவனத்தை வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் அணு உலைகளை வடிவமைத்து வருகிறது. இத்துடன் ஸ்பெஷல் பர்பஸ் அக்யூசிஷன் மற்றும் இண்ட்யூடிவ் நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறது.

அசியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது சர்வதேச விண்வெளி மையத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணங்களை வழங்கி வருகிறது. இது தவிர புவியின் சுற்றுப் பாதையின் கீழ்பகுதியில் சொந்தமாக விண்வெளி மையத்தை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.

அப்போலோ 11 விண்கலத்தை சிறு வயதில் பார்த்து வியத்த கஃபேரியன் தனது 18 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்ற கஃபேரியன் அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பொறியியல் பிரிவில் பாடம் பயின்ற கஃபேரியன் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார்.

புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி கம் கஃபேரியன் மொத்த சொத்து மதிப்பு 3.8 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.31 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. டெஸ்லாவின் எலான் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆகியோரை தொடர்ந்து விண்வெளி ஆய்வில் முதலீடு செய்திருப்பவர்கள் கம் கஃபேரியன் . இவரும் வர்த்தக விண்வெளி பிரிவில் அதிக சொத்துக்களை ஈட்டி இருக்கிறார். ரூ. 31 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள இந்த பணக்காரரின் நீண்ட நாள் ஆசை நிலவுக்கு செல்ல வேண்டும் என்பதே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com