ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், செல்போனை ஸ்ரீமதியின் தாயார் செல்வி நேரில் ஒப்படைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது.  இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் 3 நாட்களாக போராட்டம் நடத்தியபோது, காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், 4வது நாள் வன்முறை வெடித்தது. அப்போது சமூக விரோதிகளால் , பள்ளி சூறையாடப்பட்டதுடன், ஏராளமான பள்ளி வாகனங்கள் தீ வைத்த கொளுத்தப்பட்டன. இதுதொடர்பான வீடியோ,. புகைப்படங்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக , சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர்   விசாரணை நடத்தி நிதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.  மேலும் தனியார் பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும், பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் 4 முறை ஸ்ரீமதியின் தாயார் செல்விக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த சம்மனை பெற்று செல்போன் ஒப்படைக்காத நிலையில் வருகின்ற பிப்ரவரி 1.2.2023 ஆம் தேதி வழக்கு விசாரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருவதால் அதற்குள் செல்போனை விசாரனை அதிகாரியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இன்று ஸ்ரீமதியின் தாயார் செல்வி தனது வழக்கறிஞர் லூசி உடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைக்க வந்து மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரனைக்கு வந்தபோது நீதிபதி புஷ்பராணி இவ்வழக்கு விசாரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதாலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விசாரனை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீமதியின் தாயார் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி செல்போனை இன்று விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் தாய் செல்வி, எங்களுக்கு வழக்கு விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com