மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை ரத்து செய்துள்ளது!

மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை ரத்து செய்துள்ளது!

மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் Windfall வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில் இருந்து ஒரு டன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விண்ட்ஃபால் டாக்ஸ் 3500 ரூபாயாக இருந்தது, தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் வேளையில் மத்திய அரசு விண்ட்ஃபால் வரி-யை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 9 மாதங்கள் நடைமுறையில் வைத்திருந்த மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் ஒரு டன்னுக்கு 3,500 ரூபாயில் இருந்து 0 அதாவது பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. இதோடு டீசல் மீதான விண்ட்ஃபால் வரி லிட்டருக்கு ரூ.1ல் இருந்து ரூ.0.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் ஜெட் எரிபொருள் மீது விண்ட்ஃபால் வரி பல மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில் இது தொடர்கிறது.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த போது, கச்சா எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதை அனைத்தையும் விண்ட்ஃபால் வரி மூலம் மத்திய அரசு அதிகரித்தது.

தற்போது விண்ட்ஃபால் வரி கச்சா எண்ணெய் மீது முழுமையாக ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இந்தியாவில் எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் அதன் ஏற்றுமதியில் லாபத்தை அதிகரிக்க முடியும். கச்சா எண்ணெய்க்கான விண்ட்ஃபால் வரி-கள் இந்த ஆண்டு மார்ச் 21 நிலவரப்படி டன்னுக்கு ரூ.3,500 ஆகக் குறைந்தன. தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com