தீவிரவாதத்தைத் தடுக்க மொபைல் ஆப்களை முடக்க மத்திய அரசு முடிவு!

தீவிரவாதத்தைத் தடுக்க மொபைல் ஆப்களை முடக்க மத்திய அரசு முடிவு!
Published on

ம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, குழுக்களின் மூலம் தகவல்களைச் சேகரித்து அதைப் பரப்புவதற்குப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகச் கூறப்படும் பதினான்கு மொபைல் செயலிகளை (ஆப்) முடக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற மொபைல் அப்ளிகேஷன்களை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் அடிமட்ட பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதையடுத்து, அரசு முடக்க முடிவு செய்திருக்கும் பதினான்கு செயலிகளாக Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema ஆகியவை அடங்கும் என்று சொல்லப்படுகின்றன.

அதேபோல், ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் செயல்படும் மற்ற புலனாய்வு அமைப்புகள் உதவியுடன், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் இந்தியச் சட்டங்களைப் பின்பற்றாத இதுபோன்ற பயன்பாடுகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர், மேற்சொன்ன இந்த மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69Aன் கீழ் இந்தப் பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com