கடும் வெயில் தாக்கம் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தல்!

கடும் வெயில் தாக்கம் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தல்!

கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில்,பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் வெயிலால் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், நடை வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வெயில் அதிகரிப்பதால் பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா எழுதியுள்ள கடிதத்தில், பணியிடங்களில் போதிய குடிநீர், காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் அவசர கால ஐஸ் பெட்டிகள், வெப்ப நோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com