பேனா நினைவுச்சின்னம் அமைக்க சுற்று சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல்!

பேனா நினைவுச்சின்னம் அமைக்க சுற்று சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல்!

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அமையவிருக்கிற நிலையில், அவரின் இலக்கியப் பணிகளைப் போற்றும்விதமாகக் கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் எனத் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இது குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறப்போர் இயக்கத்தினர், பூவுலகின் நண்பர்கள், பா.ஜ.கவினர் பங்கேற்று தங்களது எதிர்க் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்று சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதேநேரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் போது, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com