முதல்வருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை- ஆளுநர் தமிழிசை விளக்கம்.

முதல்வருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை- ஆளுநர் தமிழிசை விளக்கம்.

புதுச்சேரி முதல்வருக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை. அண்ணன் தங்கை போல் செயல்பட்டு வருவதாகவும், இணைந்து செயல்படுவதால் மட்டுமே புதுவைக்கு கூடுதலாக இரண்டாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்திருப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்திருக்கிறார். நேற்று செவிலியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதாக வந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேற்று செவிலியர்களுடன் நடந்த சந்திப்பின் போது, பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியில் இருப்பவர்களுக்கே எதுவும் செய்ய முடியவில்லை. முதல்வர் இருக்கையில் ஏன் அமர்ந்திருக்கிறோம் என்பதே தெரியவில்லை. முதல்வர் சொன்னால் முன்பெல்லாம் பணிகள் நடைபெறும். ஏதாவது விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை தேடிப் பார்க்க வேண்டியுள்ளது என்று ஆதங்கத்தை வெளிப் படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

முதல்வரின் ஆதங்கத்திற்கு அதிகாரிகளின் செயல்பாடுகளே காரணம் என்றும் அதிகாரிகள் மத்தியில் ரங்கசாமி அரசுக்கு ஒத்துழைப்பு கிடைக்காதது முதல்வரை வருத்தப்பட வைத்திருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் ஆளுநருடனான மோதல் போக்கு முதல்வரை தொடர்ந்து வருத்தமடையச் செய்திருப்பதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்,  13 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வரோடு நானும் இணைந்து செயல்படுவதால்தான் 2 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி கிடைத் திருக்கிறது.  எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. அண்ணன் தங்கை போல் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் இருக்கையில் ஏன் இருக்கிறோம் என்றெல்லாம் தோன்றுகிறது என்று புதுச்சேரி முதல்வர் மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். கொரானா தொற்றுக்க காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து கோரிக்கைக்குபதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய ஆதங்கத்தைவெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல்வரின் கவலைக்கு செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் பேசியிருக்கலாம். நீதிமன்றத்தில் இது குறித்து  தடை ஆணைகளும், வழிகாட்டுதல்களும் இருப்பதன் காரணமாக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாத நிலை உள்ளது. முதல்வருக்கும் எனக்கும் இடையே மோதல் என்று தொடர்ந்து செய்தி பரப்பு வருகிறார்கள். புதுவை அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை விட புதுவை அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழிசை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் பல திட்டங்கள் தமிழகத்தில் பேச்சளவில் இருக்கின்றன. புதுச்சேரியில் 65 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com