மத்திய அரசுக்கு 4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகள் நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது, சில நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 15 நீதிபதிகள் இடங்கள் காலியாகவே உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக், ஜெ.சத்யநராயண பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு கூடுதலாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.

தற்போது ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பி.தனபால் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களது பெயர் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக உயரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com