வெள்ளை மாளிகை போல் காரைக்கால் நீதிமன்றம் : பொறுப்பு நீதிபதி ராஜா பேச்சு!

நீதிமன்றம்
நீதிமன்றம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

காரைக்கால் நீதிமன்றம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல் காட்சி அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி ராஜா கூறினார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் நேற்று திறக்கப் பட்டன.இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா உரையாற்றினார். காரைக்கால் நீதிமன்ற வளாகம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைந்தது போல் உள்ளது என்று குறிப்பிட்டார்.

காரைக்கால் நீதிமன்ற வளாகம்
காரைக்கால் நீதிமன்ற வளாகம்

வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை வழக்குகள் சம்பந்தமாக மட்டும் பயன்படுத்தாமல், ஒரு மனிதனின் தலைவிதியை மாற்றும் விதத்தில் நீதிமன்றம் செயல்படுவதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றும் திறனும், ஒரு மாநிலத்தின் தலைமையை மாற்றும் வல்லமையும் நீதிமன்றத்திற்கு உள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com