ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!

ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம்  நிராகரிப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் தேர்தல்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

ADMK
ADMK

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மார்ச் 31ம் தேதியன்று, நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இரு தரப்பும் பதில் அளித்தன.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 3 ஆம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி, இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமா? அல்லது இறுதி விசாரணை நடத்துவதா? என்பது குறித்து திங்களன்று நடைபெறும் விசாரணையில் முடிவெடுக்கப்படம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போழுது அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்களுக்கு எதிரான தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. அதற்கு நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com