பெண் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தடுக்க விஷம் அளிக்கப்படும் கொடூரம்!

பெண் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தடுக்க விஷம் அளிக்கப்படும் கொடூரம்!

Published on

நவம்பர் பிற்பகுதியில் இருந்து, பள்ளி மாணவிகளின் உயிருக்கு பேராபத்தாக அமையும் விதத்தில் நூற்றுக்கணக்கான சுவாச நச்சு வழக்குகள் தெஹ்ரானில் உள்ள Qom பள்ளிகளில் பதிவாகியுள்ளன, சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது.

பெண்களின் கல்வியை முடக்கும் நோக்கத்தில் புனித நகரமான Qom ல் பள்ளி மாணவிகளுக்கு "சிலர்" விஷம் வைத்ததாக ஈரானிய துணை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி, விஷம் வேண்டுமென்றே தரப்பட்டது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.

"தெற்கு ஈரானின் கோம் பள்ளிகள் என்பவை ஷியா பிரிவு முஸ்லீம்களால் அவர்களது இறையியல் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் பள்ளிகள். இவற்றில் கல்வி பெறுவதில் ஷியா முஸ்லிம்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும். அப்படிப்பட்ட Qom பள்ளிகளில் பல மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்ட விஷயம் தெரிய வந்த பிறகு, அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலக் கூடிய Qom பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டது" என்று துணை அமைச்சர் பனாஹியை மேற்கோள்காட்டி IRNA மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர் இந்த விஷயம் குறித்து விரிவாக எதையும் கூறவில்லை. அத்துடன் இதுவரை, விஷமருந்துகள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

பிப்ரவரி 14 அன்று, நோய்வாய்ப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நகரின் கவர்னரேட்டிற்கு வெளியே கூடி, அதிகாரிகளிடம் "விளக்கம் கோரி" போராட்டம் நடத்தினர் என்று IRNA செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த நாள் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி பஹதோரி ஜஹ்ரோமி கூறியதிலிருந்து உளவுத்துறை மற்றும் கல்வி அமைச்சகம் இரண்டும் இணைந்து மாணவிகள் விஷம் உட்கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார்.

கடந்த வாரம், வழக்குரைஞர் ஜெனரல் முகமது ஜாபர் மொண்டஸேரி இந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஈரானின் மிகப் பிடிவாதமான ஆடை வன்முறை குறித்து கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் குர்த் இன இளம்பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிளர்ச்சியாளர்களைத் தூண்டி விட்டார் என்று குற்றம்சாட்டி 22 வயது மாஷா ஆமினி எனும் இளம்பெண் காவல்துறை கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், விசாரணையின் போதே துரதிருஷ்டவசமாக மாஷா ஆமினி மர்மமான முறையில் இறந்து போனார். அந்நிகழ்வைத் தொடர்ந்து இப்போது பெண் குழந்தைகளின் கல்வியைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு அவர்கள் பயிலும் பள்ளிகளில் மாணவிகளிடையே விஷத்தைப் பரவ விட்டு கொல்ல முயற்சிக்கும் கொடூரம் நிகழ்ந்திருப்பது உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com