போலி குறுஞ்செய்தியில் பணமிழக்கும் அபாயம்! சைலேந்திர பாபு எச்சரிக்கை !

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு
Published on

சமீபகாலமாக பல போலி குறுஞ்செய்திகள் ஒரிஜினலை போலவே மக்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பொது மக்கள் பணமிழக்கும் அபாயம் அதிகரித்து வருவதால் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

" மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம்' என சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளம் மூலமாக இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். ”மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும், அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில் ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை அழைக்கும்படி அந்த மெசேஜில் கேட்கப்படுகிறது.

போலி குறுஞ்செய்தி
போலி குறுஞ்செய்தி

இதுபோன்று பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்பவர்கள், இந்த எண் மூலம் பலரை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாகக் கூறி அந்த பணத்தை செலுத்தும்படி அவர்களை நம்ப வைக்கின்றனர். இதனை அடுத்து மோசடியாளர்கள் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய் பணத்தை மட்டும் செலுத்த கூறுகிறார்கள்.

10 ரூபாயை செலுத்தும் பட்சத்தில் நம் செல்போனில் இருக்கக்கூடிய வங்கித் தரவுகள், ஓ.டி.பி எல்லாம் அவர்களுக்கு செல்கிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் நம் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் . இது போன்று மெசேஜ் வந்தால் பதில் அளிக்க வேண்டாம்” என்று டிஜிபி சைலேந்திர பாபு அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com