#BIG NEWS : தொகுதி வரையறை மற்றும் மகளிர் ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி..!!

Delimitation Bill failed
Womens Reservation bill failed Courtesy: India Today
Updated on

மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட தொகுதி வரையறை மற்றும் மகளிர் ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்ற நிலையில் அது தோல்வி அடைந்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மசோதா நிறைவேற எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எம்பிக்கள் இன்று மாலை வாக்களித்தனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியல் அமைப்பு சட்டம் 131 வது திருத்த மசோதா( 2026) மீதான வாக்கெடுப்பு தோல்வியை தழுவியுள்ளது.

இன்று முழுவதும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு கருத்துகள் மக்களவையில் ஒலித்த நிலையில் எம்பிக்கள் ஆதரவு குறைந்ததால் மசோதாவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

மசோதா நிறைவேற 326 எம்பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் 278 பேர் மட்டுமே ஆதரவளித்ததால் மசோதா தோல்வியடைந்துள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 பேரும் வாக்களித்தனர் .மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முடியாததால் மசோதா மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.

இனி இந்த மசோதா மீதான நிலைப்பாடு எந்த வகையில் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தோல்வி தென்னிந்திய மாநிலங்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com