காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

காங்கிரஸின் இரட்டை நிலைபாடு ! மத்தியில் ஆதரவு மாநிலத்தில் எதிர்ப்பு!

சமூகநீதி என்பது மனித குலத்துக்குப் பொதுவானது. 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பை இதயபூர்வமாக வரவேற்கிறோம் என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதற்கு பாஜக, மத்திய காங்கிரஸ் போன்ற கட்சிகள் வரவேற்றிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது சமூகநீதிக்கு கிடைத்த ஆகப்பெறும் பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

இருப்பினும், தி.மு.க வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, ``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதே ஒழிய , எந்தவொரு தரப்புக்கும் உரியது அல்ல. எனவே தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது" என ஆதரவு தெரிவித்து தனது அறிக்கையினை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, திமுகவில் EWS பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக முதல்வர்ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க, அ.தி.மு.க தவிர்த்து தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க உட்படமொத்தம் 10 கட்சிகள் கலந்து கொண்டன. பின்னர் கூட்டத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானம் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட செல்வ பெருந்தகை, தேசிய அளவில் காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், சமூக நீதியை நிலை நாட்ட திமுக எடுக்கும் முடிவினை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கும் என செல்வ பெருந்தகை கூறியுள்ளார்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com