திராவிட மாடலே இனி இந்தியாவின் ஃபார்முலா! - முதல்வர்!

திராவிட மாடலே இனி இந்தியாவின் ஃபார்முலா! - முதல்வர்!

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று வரும் 7ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்...

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு மே 7ம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை.

நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது.

அந்த வகையில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனைத் துளிகளான,

• மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம்

• நான் முதல்வன் திட்டம்

• மக்களைத் தேடி மருத்துவம்

• இல்லம் தேடி கல்வி

• காலைச் சிற்றுண்டித் திட்டம்

• நம்மைக் காக்கும் 48

• புதிய முதலீடுகள்

• அதிகத் தொழிற்சாலைகள்

• நிறைய வேலைவாய்ப்புகள்

• செப்டெம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை

உட்பட விஷயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் இந்த இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், மே 7ம் தேதி, சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்பதையும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com