ஊதிய உயர்வு தொடர்பாக கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு!

ஊதிய உயர்வு தொடர்பாக  கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள்   முடிவு!

மின் வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக கோட்டையை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்நிலையில், 2019 டிசம்பர் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை விரைந்து வழங்குமாறு தொழிற்சங்கம் சார்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மின்வாரிய உயரதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின் வாரிய அதிகாரிகளுடன் 19 தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

EB
EB

ஊதிய உயர்வு தொடர்பான நான்காம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், வருகின்ற 28-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மின் வாரிய ஊழியர்களுக்கான 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மின்சார வாரியத்திற்கு அவுட்-சோர்சிங் முறையில் ஆட்களை பணியமர்த்த கூடாது .

மின் வாரிய ஊழியர்கள் 25 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும்

மின்வாரிய ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யாமல், மின் வாரியம் மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும்.

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின் வாரிய ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

மின் வாரிய ஊழியர்கள் 25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 6 சதவீதம் மட்டும் தர மின் வாரியம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ரத்து செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

இதற்கு, மின் வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 28-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com