பெண்ணின் நடனத்தைப் பார்த்து டான்ஸ் ஆடிய யானை! க்யூட் வீடியோ!
பொதுவாகவே விலங்குகளின் சேட்டைகள், மனிதரைப் போல் அன்பு காட்டும் விலங்கின் வீடியோ என சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் வீடியோக்கள் என்றாலே அது சமூக வலைதளங்களில் வைரலாகிவிடும்.
அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் நடனம் ஆட, அவரை பார்த்து எதிரே இருந்த யானையும் நடனமாடிய காட்சி பார்ப்போரைக் கவர்ந்து வருகிறது.
வைஷ்ணவி நாயக் என்ற பெண், உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிற்கு சென்ற நிலையில், அங்கே ஓரிடத்தில் நிற்கும் யானையைக் கண்டதும், அந்த யானையைப் பார்த்து, தனது உடலை அசைத்து நடனமாட, அதற்கேற்றவாறு அந்த யானையும் தனது தலை மற்றும் உடலை அசைத்து அழகாக நடனமாடுகிறது. அவர் நடனமாடும்போது பேக்ரவுண்டில் ஒரு பாடலின் இசையையும் போட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது, இசைக்கேற்றவாறு அந்த யானை உடலை அசைத்து நடனமாடுவது போன்று அமைந்துள்ளது.
இவர் தனது இன்ஸ்டாகிராமில், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.