லைகா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை!

லைகா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகிறது.சென்னையின் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10 – க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐந்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி.நகர் விஜய ராகவா ரோட்டிலுள்ள லைகா அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் காரணமாக இந்த அமலாக்கதுறை சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவிய திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரித்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படம் எடுத்துள்ளார் . இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிபிஐ சோதனை
சிபிஐ சோதனை

இப்படம் பொருளாதார ரீதியிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. தற்போது வெளியாகிவரும் பெரும்பாலான படங்கள் லைகா நிறுவனம் தயாரித்தது. மேலும் அடுத்ததாக பெரிய பட்ஜெட் படங்களான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தில் எட்டு இடங்களில் அமலாக்கதுறை சோதனை நடத்தியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com