எம்.பி நவாஸ் கனியின் நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை!

MP Navas kani
MP Navas kani

ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தற்போது மீண்டும் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் நவாஸ் கனியின் எஸ்.டி கூரியர் நிறுவனத்தில் அமலாக்கதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனை செய்யும் இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில நாட்களாகப் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள், மணல் குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் பல சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சென்ற 9ம் தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டன. அன்று சென்னை வேப்பேரயில் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வருபவரும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவருமான ஒரு பெரிய தொழிலதிபர் வீட்டிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் போன்ற பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. இன்று நடந்தச் சோதனைக்குக் காரணம் பணப்பரிமாற்றப் புகார் எழுந்ததுதான்.

டி நகரின் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்துதான் பல்லாவரத்தில் உள்ள நவாஸ் கனியின் எஸ்.டி. கூரியர் தலைமை அலுவலகத்தில் காலை முதல் சோதனைச் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கூரியர் நிறுவனத்திற்கு நவாஸ் கனியின் மூத்தச் சகோதரரான அன்சாரி தான் தலைமை இயக்குனராக உள்ளார்.

இதையும் படியுங்கள்:
ரிவால்வர் ராணி அனுராதா – கேங்ஸ்டர் சந்தீப் அசத்தல் திருமணம்!
MP Navas kani

இந்தக் கூரியர் நிறுவனத்தின் மூலம் எதுவும் சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்பட்டதா? அல்லது எதுவும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற அடிப்படையில்தான் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியின் வேட்பாளர் நிறுவனங்களைச் சோதனைச் செய்து வருவதுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் பல்லாவரத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளரான ரியாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com