கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது !

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் அரசு, தனியார் பேருந்துகளுக்கான நுழைவு கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.

தொல்லியல் துறை தடை காரணமாக இதில், 40 ஏக்கர் நிலத்தில், 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2019 ல் துவங்கின. தற்போதைய நிலவரப்படி, 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பொங்கல் பண்டிகைக்குள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுமான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அரசு, தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சி.எம். டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை பயன்படுத்த, அரசு பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப் படுகிறது.

குறிப்பிட்ட சில போக்குவரத்து கழகங்கள், உரிய முறையில் கட்டணம் செலுத்துவதில்லை.

மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான நுழைவு கட்டணம், செலுத்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், கிளாம்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

இதற்கான வழிமுறைகளை வகுப்பது குறித்து முதலில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்டன் விரைவில் பேச்சு நடத்தப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com