சாப்பாடு சரியில்லை.. வெறும் சான்ட்விச் மட்டும் தர்றாங்க; பிசிசிஐ குற்றச்சாட்டு!

பிசிசிஐ புகார்
பிசிசிஐ புகார்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.

8-வது   டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது டி- 20  உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, நாளை சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தற்போது ஈடுபட்டு வரும் நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

‘’இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. வெறும் சான்ட்விச் மட்டுமே தரப்படுகிறது. மேலும் பயிற்சிக்கு பிறகு வீரரக்ளுக்கு வழங்கப்பட்ட உணவு ஆறிப் போய், தரமற்றதாக உள்ளதாக இந்திய அணி வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐசிசி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com