அரசின் புதிய விதி: அதிக தங்கத்திற்கு வரி!

அரசின் புதிய விதி:  அதிக தங்கத்திற்கு வரி!

ண்கள், திருமணமான பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. 

பொதுவாகவே இந்தியாவை எடுத்துக் கொண்டால் திருமணங்கள், குடும்ப விழாக்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தங்க ஆபரணங்களை அணிந்து கொள்வது அல்லது தங்கத்தை பரிசாக அளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மற்ற எந்த நாடுகளிலும் அதிகப்படியாக இல்லாத அளவுக்கு, ஏழைகள், நடுத்தரக் குடும்பம் மற்றும் பணக்கார குடும்பங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்து அதை வாங்கி சேமிக்கும் முறை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவில் அதிகப்படியான முதலீடுகள் நிலம் மற்றும் தங்கத்தில்தான் செய்யப்படுகிறது. இவ்வாறு வாங்கி வைக்கப்பட்ட தங்கமானது பல குடும்பங்களின் அவசர உதவிக்கும், மருத்துவத் தேவைக்கும், கல்வி போன்ற இன்ன பிற விஷயங்களுக்கும் உரிய நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது. World Gold Council-ன் 2022 கணக்கெடுப்பின்படி, உலகிலேயே தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் இந்தியாவின் மொத்தத் தங்க கொள்முதல் அளவு, 31.25 டன் அளவாகும். 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கம், ஆண்களும் பெண்களும் தங்களிடம் எவ்வளவு தங்கம் வரை வைத்திருக்கலாம் என சில நிபந்தனைகளை விதித்துள்ளது. 

பெண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

ரு பெண்ணுக்கு திருமணம் ஆகி இருந்தால், அவர் 500 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம். இதுவே அவர் திருமணமாகாத பெண் என்றால், 250 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க முடியும். இதற்கு மேல் அவர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் கூடுதலாக வைத்திருக்கும் தங்கத்திற்கான வரியை கட்டாயம் செலுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஆண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

ண்களுக்கு மட்டும் தங்கம் வைத்திருப்பதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆண், அதிகபட்சமாக 100 கிராம் வரை மட்டுமே தங்கம் வைத்திருக்க முடியும். அதற்கு அதிகமாக அவர் வைத்திருக்கும் போது, அதற்கான வருமான வரியை கட்டாயம் செலுத்த வேண்டும். 

சிறு சேமிப்பு, விவசாயம் மற்றும் சட்டபூர்வமான வழிகளில் தங்கம் வாங்கினால், அதற்கு எவ்விதமான வரிகளும் கிடையாது. இதுவே, தங்கத்தை மூன்று வருடங்களுக்குள் விற்கும் நோக்கில் வாங்கினால், அதற்கு குறுகிய காலம் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். மூன்று வருடங்களுக்குப் பிறகு விற்கும் நோக்கில் தங்கம் வாங்கினால், நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். 

தங்கத்தை விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத் தொகையில், 4 முதல் 20% வரை செஸ் வரி விதிக்கப் படலாம் எனவும் மத்திய அரசின் நேரடி வரி வசூலிக்கும் வாரியம் தெரிவித்துள்ளது. 

தேவைக்கு மீறிய ஆசை எதற்கு மக்களே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com