தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைகழக மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டுள்ள நிலையில் அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, ஆளுநரின் ஒப்பிதலுக்காக அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிராகரித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி சில ஐயங்களை கேட்டிருந்தார். குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமா என்றெல்லாம் கேட்டு தேசிய தேர்வு முறைகளை இந்த சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஏற்று அதன்படி நடக்குமா என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.
இதையடுத்து, இந்த மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா குறித்து கடந்த மாதம், ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு பதில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த தகவலை இன்று சட்டப்பேரவையில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன தான் சண்டையோ தெரியவில்லை.
விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழக மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டுள்ள நிலையில் அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.