ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் !

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேண்டுக்கோள்!
Online Rummy
Online Rummy

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேண்டுக்கோள் வைத்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள்களும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொது மக்களிடையே கருத்தும் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்வதற்கான சட்ட மசோதா, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

கவர்னர் ரவி
கவர்னர் ரவி

அவசர சட்டத்தின் காலம் 6 வாரங்கள் என்ற அடிப்படையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தின் காலம் நவம்பர் 27 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. எனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் நேரம் ஒதுக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com