விவசாயிகள் மகிழ்ச்சியில் தான் நாட்டின் மகிழ்ச்சி உள்ளது என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைநகர் ராய்பூரில் உள்ள கிராமங்களுக்கு சென்றார். அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் இணைந்து விவசாய பணியையும் மேற்கொண்டார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் மேலும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றிற்கு 2640 ரூபாய், 21 லட்சம் விவசாயிகளுக்கு 23 ஆயிரம் இடுபொருள் வாங்க மானியம், 19 லட்சம் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன், அனைத்து விவசாயிகளுக்கும் மின் கட்டண தள்ளுபடி, மானியம், 5 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்று பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது. மேலும் இயந்திரங்கள் அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு காங்கிரஸ் அரசு விவசாயத் துறையை பாதுகாக்க நினைக்கிறது. அதே சமயம் மோடி அரசு கல்வி, மருத்துவமனை, சுகாதாரம் என்று பல்வேறு பொதுத்துறைகளையும் தனியார்வயமாக்க முயற்சி மேற்கொள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களுடைய உரிமையை நிலைநாட்டு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்பொழுது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அடித்தட்டு மக்களினுடைய மேம்பாட்டிற்கும் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.