’இறந்துவிட்ட கணவன் பெற்றோருக்கு மருமகள் பராமரிப்புத் தொகை தரத் தேவையில்லை’ உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

’இறந்துவிட்ட கணவன் பெற்றோருக்கு மருமகள் பராமரிப்புத் தொகை தரத் தேவையில்லை’ உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
Published on

காராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வந்தார் 38 வயதான ஷோபாவின் கணவர் டிட்கே. இவர் திடீரென இறந்துவிட்ட நிலையில், ஷோபா மும்பையில் உள்ள அரசு நடத்தும் ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினார். இந்த நிலையில் 68 வயதான கிஷன்ராவ் டிட்கே மற்றும் 60 வயதான காந்தபாய் டிட்கே ஆகியோர், தங்களின் மகன் இறந்த பிறகு தங்களுக்கு வருமானம் இல்லை என்றும், தங்களது மருமகள் தங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடினர்.

நீதிமன்றத்தில் ஷோபா, ‘தனது கணவரின் பெற்றோருக்கு அவர்களது கிராமத்தில் நிலம் மற்றும் வீடு இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து இழப்பீடாக 1.88 லட்ச ரூபாயை அவர்கள் பெற்றதாகவும் கூறி வாதாடினார். இந்த வழக்கில், `இறந்த கணவரின் பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையை ஷோபா செலுத்த வேண்டும்' என மகாராஷ்டிராவின் லத்தூர் உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து ஷோபா, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிஷோர் சாந்த் பெஞ்ச் தனது தீர்ப்பில், ``குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125வது பிரிவில், தன்னைத்தானே பார்த்துக்கொள்ள ஒருவரால் முடியுமெனில், தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோரால் தங்களைப் பார்த்துக்கொள்ள இயலாதபட்சத்தில், அவர்களுக்கான பராமரிப்பைத் தர அவர் மறுக்க முடியாது. இந்தப் பிரிவில் மாமனார், மாமியார் பற்றி குறிப்பிடப்படவில்லை. இறந்த கணவர் எம்எஸ்ஆர்டிசியில் பணிபுரிந்திருக்கிறார்; ஆனால், இப்போது ஷோபா, மாநில அரசின் சுகாதாரத் துறையில் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த நியமனம் கருணை அடிப்படையில் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, இறந்த கணவரின் பெற்றோருக்கு மருமகள் பராமரிப்புத் தொகை செலுத்தத் தேவையில்லை" என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com