கடந்த சில நாட்களுக்கு ஆவின் பால் பேக்கட்களின் விலையை தமிழக அரசு ஏற்றியுள்ளது. அதில் வணிகர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆரஞ்சு நிற ஆவின் பால் பேக்கட்களின் விலையை மட்டும் ரூபாய் 12/- ஏற்றியுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் , ப்ளூ மற்றும் பச்சை நிற ஆவின் பால் பேக்கட்களின் விலை பழைய விலையே தொடரும் என்றும் அறிவித்திருந்தது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "குழந்தை முதல் முதியவர் வரை பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை, பாஜக வன்மையாக
கண்டிக்கிறது. ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து, வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவர் மேலும் "அரசின் ஆவின் பால் நிறுவனம், நிர்வாக சீர்கேட்டால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், தண்ணீர் வரி, பதிவு கட்டணம், கழிவு நீர் வரி என, அனைத்து வரிகளையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளது, தி.மு.க., அரசு " என குற்றம் சாட்டினார்.
பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பால் பாக்கெட்களை கலர் கலராக வேறுபடுத்தி, கண்டபடி விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்தும் தி.மு.க., ஆட்சியை கண்டித்து, தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில், வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.