அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன் விவகாரம்! சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை !

அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன் விவகாரம்! சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை !
Published on

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த சீனாவுக்குச் சொந்தமான பலூன் (UFO) ஒன்றை அமெரிக்க விமானப்படை முதல்முறையாகச் சுட்டு வீழ்த்தியது. இந்த அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்காவின் எப்22 ரகப் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கனடா வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு (பலூன் - UFO) வீழ்த்தப்பட்டது. இதன் பின் சில நாட்களுக்கு பின் அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்று பகுதியில் மற்றொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சீனாவின் உளவு பலூன் எனக் கூறப்பட்டு அமெரிக்க அரசு அதனை சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து, பெய்ஜிங்கின் விண்வெளித் திட்டங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பல தலைவர்கள் சீனாவின் இந்த விசித்திரமான செயலை கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். இதேவேளையில் மாநில செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனா செல்ல திட்டமிட்ட நிலையில் இந்தப் பயணத்தை ரத்துச் செய்துள்ளார். ஏற்கனவே சீனா தைவான் மற்றும் தென் கிழக்கு கடல் பகுதி நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது பலூன் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.

இந்தப் பிரச்சனை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல செவ்வாயன்று, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம், 2019 முதல் ஜப்பானிய வான்வெளியில் குறைந்தது மூன்று பறக்கும் பொருள்கள் கண்டதாகவும், அது சீன உளவு பலூன்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான், சீன அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக சீனா அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. சீன அரசு இந்தப் பலூன் ஆளில்லா வானிலை விமானம் என்று கூறுகிறது, அது தற்செயலாகத் திசை மாறி அமெரிக்கா பக்கம் சென்றுள்ளது. ஆனால் அமெரிக்கா இதை F-22 போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டு வீழ்த்தி அமெரிக்கா மிகைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com