ஸ்ரீதேவி... தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தவர். அதன் பிறகு ‘துணைவன்’ படத்தில் நாயகியாக நடிக்கத் தொடங்கியவர் சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார் போன்றோருடன் நடித்து தமிழில் நெம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் கால் பதித்தார். பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்த அவர் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு குடி போதையில் பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது; இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவரது வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருக்கிறது. இந்த புத்தகம் ‘ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.
இந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி ‘துணைவன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘மூன்று முடிச்சு’ ‘16 வயதினிலே’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ ‘மூன்றாம் பிறை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் கால் பதித்தார்.
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், சிரஞ்சீவி, சல்மான்கான், ஷாருக்கான் என அத்துனை முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்த அவர் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இதுமட்டுமல்லாது பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி அவர் இறுதியாக ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ ‘ மாம்’ ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இது குறித்து தீரஜ் கூறும் போது,
“ மதிப்பிற்குரிய வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா மற்றும் சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி மற்றும் கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
வெஸ்ட்லாண்ட் புத்தக நிர்வாக ஆசிரியர் கூறும் போது, “ இந்த புத்தகத்தில் முதலில் என்னை ஈர்த்தது அதன் பின்னால் இருக்கக்கூடிய ஆராய்ச்சிதான். ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்துடன் தீரஜ் குமாருக்கு இருக்கக்கூடிய நட்பு ஸ்டார் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட உலகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஸ்ரீதேவி எனும் ஐகானைப் பற்றி வாசகர்கள் இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.” என்று பேசினார்.