கர்நாடகா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும்!

கர்நாடகா தேர்தலுக்கான  பாஜக வேட்பாளர்களின்  பட்டியல்  இன்று வெளியாகும்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜகவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

ஒவ்வொரு தொகுதி, மாவட்டங்களில் இருந்தும் வேட்பாளர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அதை வைத்தே ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருந்து ஒருவரை கட்சியின் நாடாளுமன்ற குழு தேர்வு செய்து அறிவிக்கும் என்கிறது பாஜக வட்டாரங்கள்.பாஜகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து 100 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com