ஆஸ்கர் குழு வெளியிட்ட பரிந்துரைப் பட்டியல்! 'இரவின் நிழல்', 'RRR' உட்பட 10 இந்திய படங்கள் தகுதி!

ஆஸ்கர் குழு வெளியிட்ட பரிந்துரைப் பட்டியல்! 'இரவின் நிழல்', 'RRR' உட்பட 10 இந்திய படங்கள் தகுதி!

வருகின்ற மார்ச் மாதம் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கும் நிலையில், ஆஸ்கர் குழுவினர் அதற்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து 'இரவின் நிழல்', 'RRR', 'காந்தாரா' உட்பட 10 படங்கள் இடம்பிடித்துள்ளன.

சினிமா என்ற பெரும் படைப்புக்கு எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், ஆஸ்கார் என்ற விருதே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து படங்கள் தேர்வாவதே அரிதாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதையெல்லாம் புறந்தள்ளி இன்று இந்தியாவிலிருந்து பல படங்கள் ஆஸ்கருக்கு தகுதி பெற்று வருகின்றன.

உலகின் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் பிரிவு வாரியாக ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இதில் போட்டியிடும் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது. அதில் 10 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி,

ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம்

பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்'

மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி'

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'கங்குபாய் கத்தியவாடி'

விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படமும் இடம் பெற்றுள்ளதோடு,

இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட குஜராத்தி படமான 'தி செல்லோ ஷோ' படமும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

மேலும்

மராத்தி படங்களான Me Vasantrao, Tujhya Sathi Kahi Hi

அனுப் பண்டாரி இயக்கிய 'விக்ராந்த் ரோனா' ஆகிய இந்திய படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.

அந்த வகையில், 'இரவின் நிழல்' படத்தின் இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கே உரிய பாணியில் ட்வீட் செய்துள்ளார்.

இதைப்போன்று பலரும் தங்கள் படம் தகுதி பெற்றதைத் தொடர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com