2 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தை தடை செய்யக் கோரி காவல் நிலையத்தை நாடிய மனிதர்!

2 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தை தடை செய்யக் கோரி காவல் நிலையத்தை நாடிய மனிதர்!

த்தரகாண்ட் மாநிலத்தில் ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், தன் பெற்றோரை புதிதாக  ‘அம்மி’ என்றும் ‘அப்பு’ என்றும் அழைத்ததால் அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் குழந்தை தனது ஆங்கிலப் பாடப்புத்தகத்திலிருந்து இந்த வார்த்தையைக் கற்றுக்கொண்டதாகக் கூறப் படுகிறது.

சிறுவனின் தந்தையான மணீஷ் மிட்டல், இது குறித்து  உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றார்.

அந்த வாசகத்தை நீக்கி அல்லது அதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் 'Mother' மற்றும் 'Father' என்று மாற்ற வேண்டும் என்று மிட்டல் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

"ஆங்கிலம் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதுபோன்ற தவறான நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். இது ஒரு தீவிரமான விஷயம் மற்றும் எங்கள் பொதுவான நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகள் மீதான கடுமையான தாக்குதல்,”என்று இதை நான் கருதுகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

"இதுபோன்ற மத விரோத செயல்களை" தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாஜிஸ்திரேட்டை மிட்டல் மேலும் வலியுறுத்தினார். அத்துடன் அந்தப் புத்தகத்திற்கு மாவட்ட அளவில் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி சோனிகா, விசாரணையை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

முதன்மைக் கல்வி அதிகாரி பிரதீப் குமார், முதற்கட்ட விசாரணையில் கிடைத்த உண்மைகளை மேற்கோள் காட்டி, புத்தகத்தின் உள்ளடக்கத்தைப்  படித்ததாகக் கூறினார். உண்மையில், அது அந்தப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஆங்கில செய்யுள் பகுதியில் இடம் பெற்றிருந்தது. இதில் அமீர் என்ற கேரக்டர் தனது அம்மி-அப்புவிடம் பேசுகிறார். அதற்கு தான் மணீஷ் மிட்டல் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். என்றவர்;

மேலும் பேசுகையில், "இந்த விஷயத்தை அறிந்தவுடன், நான் சர்ச்சைக்குரிய செய்யுள் பகுதியைப் படித்தேன். புதன்கிழமை, இந்து வாஹினி மக்களும் புகாருடன் வந்தனர். புத்தகத்தின் 'வார்த்தைகள்' ஐசிஎஸ்சி வாரியத்துடன் விவாதிக்கப்படும். சில பள்ளிகளின் முதல்வர்களையும் அழைத்து கூட்டம் நடத்துவதாக உள்ளோம். என்று அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com