சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் அமைச்சர் சிக்கிய விவகாரத்தில் இரு பொறியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவத் துறை அமைச்சர் சுப்ரமணியன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அலுவலகத் திறப்பு விழாவிற்காக சில தினங்களுக்கு முன் சென்றார். அப்போது மின் தூக்கி பழுதாகி பாதி வழியில் லிப்டில் சிக்கிய அமைச்சரை பின்னர் பத்திரமாக லிப்டை திறந்து மீட்டனர்.
ஸ்டாலின் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த அமைச்சர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் லிப்டில் அவர் கீழே இறங்கியபோது, அது பாதியில் பழுதாகி நின்றது.
இதையடுத்து வெளியில் இருந்து கதவை திறந்து நாற்காலிகள் உதவியுடன் அமைச்சர் மற்றும் உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மின் தூக்கி சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது தெரியவந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் சசிந்தரன் மற்றும் உதவிப் பொறியாளர் கலைவாணி ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.